மது குடிக்க பணம் தர மறுத்த தங்கையை இரும்பு கம்பியால் தாக்கி கொல்ல முயன்ற அண்ணன் கைது
மது குடிக்க பணம் தர மறுத்த தங்கையை இரும்பு கம்பியால் தாக்கி கொல்ல முயன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மது குடிக்க பணம் தர மறுத்த தங்கையை இரும்பு கம்பியால் தாக்கி கொல்ல முயன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
இரும்பு கம்பி தாக்குதல்
மும்பை வக்கோலா கோலிபார் நாக்காவை சேர்ந்தவர் சுரேந்திர சவான். கடந்த 8 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. குடிபழக்கத்துக்கு அடிமையான இவர், அடிக்கடி பணம்கேட்டு பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் சுரேந்திர சவானின் தங்கை ருபாலி மட்டும் இருந்தார். அப்போது, ருபாலியிடம் மது குடிக்க ரூ.2 ஆயிரம் தருமாறு சுரேந்திர சவான் கேட்டுள்ளார். ஆனால் ருபாலி பணம் கொடுக்க மறுத்து உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் அங்கு கிடந்த இரும்பு கம்பியால் ருபாலி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினார். இதில் படுகாயமடைந்த ருபாலி ரத்த வெள்ளத்தில் மயங்கிச்சரிந்தார்.
கைது
இதையடுத்து சுரேந்திர சவான் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ருபாலியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாயர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வக்கோலா போலீசார் தானே ரெயில்நிலையத்தில் சுற்றிக்கொண்டு இருந்த சுரேந்திர சவானை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story