வகுப்பறைகள் சரியாக அமைந்தால் கொலை, கொள்ளைகள் நடக்காது முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பேச்சு
வகுப்பறைகள் சரியாக அமைந்தால் கொலை, கொள்ளைகள் நடக்காது என்று முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக் குமார் பேசினார்.
செய்யாறு,
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் பி.பொய்யாமொழி பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது, மாவட்ட கல்வி அலுவலர் பி.நடராஜன் (பொறுப்பு) தலைமை தாங்கினார். ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் டி.சம்பத் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் எம்.எஸ்.சுகானந்தம் வர வேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், சத்தியமங்கலம் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.கிருஷ் ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது முதன்மை கல்வி அலுவலர் பேசியதாவது:-
மாணவர்களுக்கு வகுப் பறைகள் சரியாக அமைந் தால் சமுதாயத்தில் கொலை, கொள்ளைகள் மற்றும் பாலியல் துன்புறுத் தல்கள் நடக்காது. மாணவர்களை சமமாக பார்க்கும் மனபக்குவம் ஆசிரியர்களிடம் இல் லாததால் வகுப்பறையில் மக்கு, படிப்பு வராது என மாணவர்கள் ஓரம் கட்டப் படுகிறார்கள். ஆசிரியர்கள் தன்பிள் ளை களுக்கு கொடுக்கும் கல்வியை தன்னிடம் படிக்கும் மாணவர் களுக்கு கற்று கொடுக்க வேண் டும். மாவட்டத்தில் கல்வி முன் னேற்றத்திற்கு ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். தற்போது அரசுப்பள் ளிகள் மீது மக்கள் மத்தியில் நம்பிக்கை வந்துள்ளது.
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத் தியில் நன்மதிப்பை பெற கடிமையாக உழைக்க வேண் டும். ஆசிரியர்கள் மத்தியில் நீண்ட காலமாக ஏற்றத்தாழ்வு நிலவி வருவதால் தான் கல்வியில் பின்தங்கி உள்ளது. அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் வகுப் பறைகள் சரியாக அமைந்தால் நீதித்துறைக்கு ஒரு வழக்குகள் கூட வராது, நீதித்துறைக்கும் காவல்துறைக்கும் பணிகள் குறையும். மாணவர்கள் சரியாக பட்டை தீட்டப் பட்டால் எந்த பிரச்சினையும் வராது. ஆசிரியர்கள் தொலை நோக்கு சிந்தனை யுடன் ஒவ்வொரு நாளும் சிறப்பாக பணியாற்ற வேண் டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
நிகழ்ச்சியில் செய்யாறு கல்வி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண் டனர். முடிவில் வக்கீல் எழில்நிலவன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story