ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்பட 430 பேர் மீது வழக்கு


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்பட 430 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Jun 2019 10:15 PM GMT (Updated: 2 Jun 2019 6:54 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்பட 430 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவாரூர்,

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல் படுத்த கூடாது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடும் விவசாயிகள் மீது வழக்குகள் போடக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கொரடாச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்டதாக 80 பெண்கள் உள்பட 430 பேர் மீது மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story