செஞ்சி அருகே நகை அடகு கடையில் கொள்ளை முயற்சி வடமாநில வாலிபர்கள் 3 பேர் கைது


செஞ்சி அருகே நகை அடகு கடையில் கொள்ளை முயற்சி வடமாநில வாலிபர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2019 10:30 PM GMT (Updated: 2 Jun 2019 6:57 PM GMT)

செஞ்சி அருகே நகை அடகு கடையில் கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி, 

திருவண்ணாமலையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் செந்தில் (வயது 39). இவர் செஞ்சி தாலுகா கடலாடிகுளம் கிராமத்தில் நகை அடகு கடை வைத்துள்ளார்.

இவர் நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவில் 3 வாலிபர்கள், செந்திலின் அடகு கடை ஷட்டரின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். இந்த சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து 3 பேரையும் மடக்கிப்பிடித்து நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் கொல்கத்தாவை சேர்ந்த தினேஷ்மன்னால் (வயது 40), சோரோப் மண்டல் (21), சுரேன் (25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story