ராகுல்காந்தி தலைவராக தொடர வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்


ராகுல்காந்தி தலைவராக தொடர வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 3 Jun 2019 4:15 AM IST (Updated: 3 Jun 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்தி தலைவராக தொடர வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் இருகூர் காந்தி சிலை முன் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

சிங்காநல்லூர்,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்து இருந்தார். இதற்கு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கோவையை அடுத்த இருகூர் காந்தி சிலை மைதானம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தொடர்ந்து பணியாற்ற வேண்டும். நாடு முழுவதும் பா.ஜனதா கட்சி வெற்றி குறித்து சந்தேகம் வலுவடைந்துள்ளது. குறுகிய எண்ணத்தோடும், நீதி, நேர்மை இன்றி பா.ஜனதா கட்சியினர் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வெற்றி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் முன்னாள் மாவட்டத்தலைவர் சின்னையன், முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம்,எச்.எம்.எஸ். ராஜாமணி, மாவட்ட துணைத்தலைவர்கள் முருகேசன், லாலி ரோடு செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் இருகூர் சுப்ரமணியன், சின்ராஜ், விஜயகுமார், ஜெகநாதன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன் குமார், ரங்கசாமி, வெள்ளிங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன்குமார் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

Next Story