பவானி பகுதியில் வெவ்வேறு இடங்களில் மணல் ஏற்றி வந்த டிராக்டர்கள்-லாரி பறிமுதல்


பவானி பகுதியில் வெவ்வேறு இடங்களில் மணல் ஏற்றி வந்த டிராக்டர்கள்-லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 3 Jun 2019 3:30 AM IST (Updated: 3 Jun 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

பவானி பகுதியில் வெவ்வேறு இடங்களில் மணல் ஏற்றி வந்த டிராக்டர்கள் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

பவானி,

பவானி ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக பவானி வருவாய் தாசில்தார் வீரலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவருடைய தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கேசரிமங்கலம் ஆற்றுப்பகுதியில் இருந்து அந்த வழியாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பவானி அருகே உள்ள மைலம்பாடி கிராமத்தில் பவானி மண்டல துணை தாசில்தார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கூத்தம்பட்டி என்ற இடத்தில் இருந்து மயிலம்பாடி நோக்கி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அந்த டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்தனர்.

மேலும் பவானி மண் தொழிலாளர் வீதியில் மணல் கடத்தி சென்றதாக ஒரு டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பவானி தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Next Story