விதிமுறைகளை மீறி இயக்கப்படும் மினி பஸ்களுக்கு தடை விதிக்க வேண்டும்; ஜக்கனாரை கிராம மக்கள் புகார்
விதிமுறைகளை மீறி இயக்கப்படும் மினி பஸ்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜக்கனாரை கிராம மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அரவேனு அருகே உள்ள ஜக்கனாரை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் வசதிக்காக ஒரு அரசு பஸ் உள்பட 5 மினி பஸ்கள் கோத்தகிரியில் இருந்து ஜக்கனாரை கிராமத்துக்கு இயக்கப்படுகிறது. இதில் ஒரு மினி பஸ் கூடுதலாக பயணிகளை ஏற்றிச்செல்வதுடன், அதிவேகமாக செல்வதாக புகார் எழுந்தது.
மேலும், அந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பயணிகளுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி ஜக்கனாரை ஊர் நிர்வாகிகள் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசினர். இருப்பினும் அதே நிலை நீடித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.45 மணிக்கு குறிப்பிட்ட அந்த மினி பஸ் அதிவேகத்தில் வந்துள்ளது.
அந்த பஸ்சில் ஜக்கனாரை முன்னாள் ஊர் தலைவர் கண்ணன் என்பவர் ஜக்கனாரை கிராமம் வந்ததும் இறங்க வேண்டும் என்று கூறிஉள்ளார். அப்போது கண்டக்டர் அவரிடம் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதை அறிந்த கிராம மக்கள் மினி பஸ்சை சிறைபிடித்தனர். பின்னர் ஊர் நிர்வாகி பாண்டியன் என்பவர் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்சை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து சென்ற மினி பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் பாண்டியன் மீது கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளனர். இது பற்றி தெரிந்ததும் கிராம மக்கள் போலீஸ் நிலையத்துக்கு சென்று பாண்டியன் மீது அளித்த பொய்யான புகார் மீது நடவடிக்கை எடுக்க கூடாது, பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் கண்டக்டர், டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்து விட்டு சென்றனர்.
இது குறித்து ஜக்கனாரை கிராம மக்கள் கூறும்போது, சம்பந்தப்பட்ட மினி பஸ் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. கூடுதல் பயணிகளை ஏற்றி போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்படும் மினி பஸ்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து தடை விதிக்க வேண்டும், என்றனர்.

Related Tags :
Next Story