பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் தபால் ஊழியர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்


பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் தபால் ஊழியர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Jun 2019 4:15 AM IST (Updated: 3 Jun 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தபால் ஊழியர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி கோட்ட 3-ம் பிரிவு அனைத்திந்திய தபால் ஊழியர் சங்க மாநாடு தூத்துக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மாநாட்டுக்கு கோட்ட தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். உதவி செயலாளர் பொன்ராம்குமார் வரவேற்று பேசினார். கோட்ட செயலாளர் மனோகர் தேவராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். நிதி செயலாளர் முத்துலட்சுமி வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். மாநில தலைவர் செல்வகிருஷ்ணன் சம்மேளன கொடியை ஏற்றி வைத்தார். சங்கரசுப்பு தேசிய கொடியை ஏற்றினார்.

மாநாட்டில் பணி ஓய்வு பெற்ற மூத்த உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். மாநாட்டில் கோட்ட சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பதவிகள் அனைத்தும் உடனடியாக நிரப்ப வேண்டும், நிறுத்தப்பட்ட அட்வான்ஸ்கள் திரும்ப வழங்க வேண்டும். இலாகா ஊழியர்கள் மற்றும் கிராமப்புற தபால் ஊழியர்கள் அனைவருக்கும் முழுமையான மருத்துவ காப்பீடு வசதி செய்து தர வேண்டும். தபால் ஊழியர்களுக்கும், 2, 4-ம் சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் தென்மண்டல செயலாளர் சுப்பிரமணியன், மாநில உதவி நிதி செயலாளர் இளங்கோவன், ஸ்ரீவைகுண்டம் கிளை செயலாளர் முத்துபட்டராஜன், மகிளா கமிட்டி ஹென்லின் மெரிட்டா, லாவண்யாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story