சுடுகாட்டில் சிதையில் பாய்ந்து வாலிபர் தற்கொலை நாக்பூரில் அதிர்ச்சி சம்பவம்


சுடுகாட்டில் சிதையில் பாய்ந்து வாலிபர் தற்கொலை நாக்பூரில் அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 3 Jun 2019 4:30 AM IST (Updated: 3 Jun 2019 4:24 AM IST)
t-max-icont-min-icon

நாக்பூரில் சுடுகாட்டில் சிதையில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

நாக்பூர், 

நாக்பூரில் சுடுகாட்டில் சிதையில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சிதையில் பாய்ந்து தற்கொலை

நாக்பூர் எம்.ஐ.டி.சி.யில் உள்ள ஜய்டலா பகுதியில் வசித்து வருபவர் மகேஷ் கோடங்டே(வயது34). இவரது வீட்டின் அருகில் உள்ள சுடுகாட்டில் நேற்று முன்தினம் இறந்த ஒருவருக்கு இறுதிச்சடங்குகள் நடந்தன.

இறுதிச்சடங்குகளை முடிந்துவிட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரது சிதைக்கு தீமூட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இந்தநிலையில் அங்கு வந்த மகேஷ் கோடங்டே எரிந்துகொண்டிருந்த அந்த சிதையில் திடீரென பாய்ந்தார். இதில் அவரது உடலில் தீப்பற்றியது. காப்பாற்றகோரி அலறிய அவர் சிறிதுநேரத்தில் உடல் முழுவதும் தீ பரவியதில் துடிதுடித்து இறந்துபோனர். அவர் சிதையில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இந்த கோர சம்பவத்தை நேரில் பார்த்த அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இருப்பினும் அவரின் இந்த விபரீத முடிவுக்கான காரணம் தெரியவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக மகேஷ் கோடங்டே மனதளவில் சற்று பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story