மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தேன்கனிக்கோட்டையில் போலீசாருக்கு யோகா பயிற்சி


மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தேன்கனிக்கோட்டையில் போலீசாருக்கு யோகா பயிற்சி
x
தினத்தந்தி 4 Jun 2019 4:30 AM IST (Updated: 3 Jun 2019 8:53 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் போலீசாருக்கு யோகா பயிற்சி நடந்தது.

தேன்கனிக்கோட்டை, 

போலீசார் பணி சுமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் காவல் துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா பயிற்சி நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவின் பேரில், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் இந்த யோகா பயிற்சி நடந்தது.

இந்த பயிற்சியில் மன அமைதி, பொறுமை, தியானம் குறித்த பயிற்சிகள் போலீசாருக்கு வழங்கப்பட்டன. பயிற்சிகளை ஓசூரைச் சேர்ந்த பாரஸ் வழங்கினார். அதனை பின்பற்றி போலீசாரும் யோகா செய்தனர். இந்த யோகா பயிற்சியில் தேன்கனிக்கோட்டை வக்கீல் ராம்பிரகா‌‌ஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன் (தேன்கனிக்கோட்டை), சிவலிங்கம் (ராயக்கோட்டை) மற்றும் ஏட்டுகள், போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story