தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் அமைச்சர் காமராஜ் பேட்டி
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
கூத்தாநல்லூர்,
திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாகை நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அமைச்சர் ஆர்.காமராஜ், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜீவானந்தம், சரவணன் ஆகியோர் வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர் பகுதிகளில் வாகனத்தில் ஊர்வலமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
பின்னர் கூத்தாநல்லூரில் அமைச்சர் ஆர்.காமராஜ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இதுவரையிலும் அரசியல் தலைவர்கள் சொல்லாத பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றும் வகையில் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அவர் சொன்ன பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விஸ்வரூபம்
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி, மத்தியில் மோடி ஆட்சி என்பதை மக்கள் தீர்மானித்துள்ளார்கள். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய்யான பிரசாரத்தால் வெற்றி பெற்றாலும், மக்கள் ஏமாற்றப்பட்ட மனநிலையில் உள்ளனர். இன்னும் 6 மாதத்தில் அ.தி.மு.க. விஸ்வரூபம் எடுக்கும். மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு செயல்படுத்தாது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
கொரடாச்சேரி
இதேபோல வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி கொரடாச்சேரியில் நடந்தது. இதில் அ.தி.மு.க. சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தாழை.ம.சரவணன், திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஆர்.ஜீவானந்தம் ஆகியோர் கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் அம்மையப்பன் உள்பட பல்வேறு இடங்களிலும் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.வினர் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story