நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 178 மனுக்கள் பெறப்பட்டன


நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 178 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 4 Jun 2019 4:15 AM IST (Updated: 4 Jun 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 178 மனுக்கள் பெறப்பட்டன.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 178 மனுக்கள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவாரத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

பணி நியமன ஆணை

இதைத்தொடர்ந்து தரங்கம்பாடி வட்டம், சங்கரன்பந்தல் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவருக்கு, பிரிண்டிங் தொழில் செய்திட ஏதுவாக மாவட்ட கலெக்டர் தனது விருப்ப நிதியில் இருந்து ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையினையும், ஊரக வளர்ச்சித்துறையில் பணியில் இருக்கும் போது உயிரிழந்த சுப்பிரமணியன் என்பவரது வாரிசுதாரரான சுமதி என்பவருக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணையினையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் வேலுமணி (சமூகப்பாதுகாப்புத் திட்டம்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிச்சை மொய்தீன் (வளர்ச்சி) உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story