தார்வாரில் 16 அடி ஆழ கிணற்றில் தவித்த பூனை நண்பர்களுடன் சேர்ந்து வாலிபர் மீட்டார்
தார்வாரில் 16 அடி ஆழ கிணற்றில் தவித்த பூனையை நண்பர்களுடன் சேர்ந்து வாலிபர் ஒருவர் மீட்டார்.
தார்வார்,
தார்வார் டவுன் வித்யாஷாக்ஷி பகுதியில் பாழடைந்த 16 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இந்த கிணற்றில் ஒரு பூைன தவறி விழுந்துள்ளது. அந்த கிணற்றில் படிக்கட்டுகள் இ்ல்லை. மேலும் தண்ணீர் இன்றி அந்த கிணறு கிடந்தது. இதனால் பூனையால் வெளியே வர முடியாமல் தவித்தது. இதன் காரணமாக சத்தம்போட்டப்படியே கிணற்றுக்குள் பூனை சுற்றி சுற்றி வந்தது.
அப்போது அதே பகுதிைய சேர்ந்தவர் தேவராஜ் என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் அந்த வழியாக வந்துள்ளார். அவர் பூனை சத்தம் கேட்டு கிணற்றை எட்டி பார்த்துள்ளார். அப்போது தான் பூனை கிணற்றில் தவறி விழுந்து தவித்தது அவருக்கு தெரியவந்தது. இதையடுத்து தேவராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பூனையை மீட்க முடிவு செய்தார். அதன்படி கிணற்றுக்குள் ஒரு ெபரிய கயிற்றை கட்டி ஏணியை இறக்கினர். பின்னர் கயிற்றை பிடித்து தேவராஜ் கிணற்றுக்குள் இறங்கி, பூனையை மீட்டு கயிற்றில் கட்டப்பட்ட வாளியில் போட்டார். அவரது நண்பர்கள் அதனை தூக்கி, கிணற்றில் இருந்து பூனையை மீட்டனர். பின்னர் தேவராஜும், அவரது நண்பர்களும் வாளியில் இருந்த பூனையை வெளியே விட்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்து வருகிறது.
Related Tags :
Next Story