வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு
வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை,
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சரியான முறையில் இடஒதுக்கீடு இல்லை என தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தலும் நடக்காமல் பல மாதங்களாக தள்ளிப்போனது.
தற்போது தேர்தலுக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகளை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் தாழ்த்தப்பட்டவர்கள் (பொது), தாழ்த்தப்பட்டவர்கள் (பெண்கள்), பழங்குடியினர் (பெண்கள்), பொது உள்பட 6 வகையாக பிரித்து இட ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விவரம் வருமாறு:-
3,15,33,58 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவினருக்கும், 5,16,17,20,37 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கும், 4,7,9,13,14,18,19,28,29,30,31,32,38,40,41,42,43,44,45,46,48,50,56,57,60 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவினருக்கும் மற்ற வார்டுகள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட ஊராட்சியில் 40 வார்டுகள் உள்ளன. அதில் 1,12,15,30,37 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவினருக்கும், 2,8,9,10,13,14,19,32,33,34,35,36,38,39,40 ஆகிய வார்டுகள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 3,4,5,6,7,16,17,18,20,21,26,27,28,29 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவினருக்கும் 11,22,23,24,25 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண்கள் பிரிவினருக்கும் 31-வது வார்டு பழங்குடியின பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story