குற்றவாளிகளை கைது செய்யும் வரை மார்ட்டின் நிறுவன அதிகாரி உடலை பதப்படுத்தி வைக்க வேண்டும்; மனைவி, மகன் கலெக்டரிடம் மனு
குற்றவாளிகளை கைது செய்யும் வரை மார்ட்டின் நிறுவன அதிகாரி உடலை அரசு ஆஸ்பத்திரியில் பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று அவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராஜாமணி தலைமைதாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பின்னர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மர்மமான முறையில் இறந்த பழனிசாமியின் மனைவி சாந்தாமணி, மகன் ரோகின் குமார் மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் சாந்தாமணி கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மார்ட்டின் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்த எனது கணவர் கடந்த மே மாதம் 3-ந் தேதி மர்மமான முறையில் ஒரு குட்டையில் இறந்து கிடந்தார். அவரின் மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. எனவே அவர் எப்படி இறந்தார் என்று கூட தெரியாமல் அவரின் உடலை வாங்கி அடக்கம் செய்ய எங்களுக்கு மனமில்லை.
மேலும் கடந்த மாதம் 5-ந் தேதி நடந்த பிரேதபரிசோதனை அறிக்கை மற்றும் கடந்த 28-ந் தேதி நடந்த மறு பிரேதபரிசோதனை அறிக்கைகளை என்னிடம் வழங்க வேண்டும். எனது கணவரின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை அவரின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரியிலேயே உரிய முறையில் பதப்படுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோவை வடவள்ளியை சேர்ந்த லட்சுமி என்ற பெண் தனது 3 குழந்தைகளுடன் வந்து அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
எனது கணவர் பெரியசாமி கட்டிட தொழில் செய்து வந்தார். அவர், கடந்த ஆண்டு ஒண்டிப்புதூர் அருகே கட்டுமான பணிக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி இறந்தார். இதையடுத்து கட்டிட ஒப்பந்ததாரர் சார்பில் எனது குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் இழப்பீட்டு தொகையாக கொடுப்பதாக தெரிவித்து காசோலை ஒன்றும் கொடுத்தனர். அதை வக்கீல் ஒருவர் பெற்றுக்கொண்டு என்னிடம் இதுவரை கொடுக்கவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டால் அவர் சரியாக பதில் அளிப்பதில்லை. தற்போது நான் 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு செலவுக்கு பணம் இன்றி அவதிப்பட்டு வருகிறேன். எனவே இழப்பீட்டு் தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் துணை தலைவர் பெரியசாமி, மாவட்ட குழு உறுப்பினர் மருதாசலம் உள்பட விவசாயிகள் பலர் கொட்டாங்குச்சிகளை மாலையாக அணிந்து வந்து அளித்த மனுவில், கோவை மதுக்கரை வட்டம் செட்டிப்பாளையம் பேரூராட்சி பகுதியில் கொட்டாங்குச்சிகளை எரித்து பொடியாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் இருந்து வெளியாகும் நச்சுகளால் மாசு ஏற்படுகிறது. எனவே அந்த நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ம.தி.மு.க. பீளமேடு பகுதி செயலாளர் எஸ்.பி.வெள்ளியங்கிரி மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில், அவினாசி ரோடு, விளாங்குறிச்சி ரோடு சந்திப்பில் இருந்து பீளமேடு ரொட்டிக்கடை மைதானம் வரை சாலை அமைக்க கற்கள் கொட்டி வைக்கப்பட்டன. இன்னும் சாலை அமைக்காததால் வாகன ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே விரைவாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story