மனைவியை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
மனைவியை எரித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
மும்பை,
மும்பை செம்பூரை சேர்ந்தவர் பிலால் சேக்(வயது31). இவரது 2-வது மனைவி ஹயாத். பிலால் வேலையில்லாமல் இருந்தார். எனவே அவர் வரதட்சணை கேட்டு மனைவி ஹயாத்தை கொடுமைப்படுத்தி வந்தார். 2015-ம் ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அவர் ஹயாத்தின் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.
மேலும் அந்த அறையை பூட்டினார். வலியால் துடித்த ஹயாத் காப்பாற்றுமாறு கதறினார்.
ஆயுள் தண்டனை
இதையடுத்து கதவை திறந்த பிலால்சேக் ஹயாத்தின் மீது எரிந்த தீயை போர்வையால் அணைத்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றார். அங்கு ஹயாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில், வழக்கை விசாரித்த கோர்ட்டு ஈவு, இரக்கமின்றி மனைவியை எரித்து கொலை செய்த பிலால் சேக்குக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.
Related Tags :
Next Story