மாவட்டத்தில் 32 கிளை நூலகங்களுக்கு மானிய நிதியில் தமிழ், ஆங்கில நூல்கள்


மாவட்டத்தில் 32 கிளை நூலகங்களுக்கு மானிய நிதியில் தமிழ், ஆங்கில நூல்கள்
x
தினத்தந்தி 5 Jun 2019 4:00 AM IST (Updated: 5 Jun 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 32 கிளை நூலகங்களுக்கு மானிய நிதியில் பெறப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் வழங்கப்பட்டது.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் இருந்து 32 கிளை நூலகங்களுக்கு ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை மானிய நிதியில் பெறப்பட்ட தமிழ் நூல்கள் 836-ம், 3 நூலகங்களுக்கு தலா 1055 ஆங்கில நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் அருட்செல்வம் முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை முதல் நிலை நூலகர் கோபால்சாமி மற்றும் நூலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

இது குறித்து மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி கூறியதாவது:-
போட்டித்தேர்வுகளில் பங்குபெறும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் தற்போது அனைத்து கிளை நூலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள நூல்கள் அனைத்து 2017-18ம் ஆண்டில் பதிப்பு செய்த நூல்கள் ஆகும். குறிப்பாக மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி., ரெயில்வே, போலீஸ், யு.பி.எஸ்.சி. போன்ற துறை சார்ந்தவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கிரு‌‌ஷ்ணகிரி வனச்சரக அலுவலகம் எதிரில் உள்ள நூலக அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் சிறப்பு பதிவாக பார்வையற்றோர் படிப்பதற்கு பிரய்லி முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பார்வையற்ற மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் மைய நூலகத்தில் இருந்து இணையதளத்தில் இலவசமாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story