இருவேறு விபத்துகளில் 2 பேர் சாவு


இருவேறு விபத்துகளில் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 5 Jun 2019 2:36 AM IST (Updated: 5 Jun 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

இருவேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் திருமேற்றலீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் சந்திரசேகர் (வயது 46). இவர் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் விஷாரில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

காஞ்சீபுரம் அருகே குண்டுகுளம் என்ற இடத்தில் செல்லும்போது கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சந்திரசேகரை மீட்டு உடனடியாக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மற்றொரு விபத்து

காஞ்சீபுரத்தை அடுத்த மாகரல் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (35). வாய் பேச முடியாதவர். இவர் உத்திரமேரூர் - காஞ்சீபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர் மீது மோதியது. இதில் சரவணன் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மேற்பார்வையில் மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story