மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் கலெக்டர் ஷில்பா வழங்கினார்


மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் கலெக்டர் ஷில்பா வழங்கினார்
x
தினத்தந்தி 4 Jun 2019 10:15 PM GMT (Updated: 4 Jun 2019 9:13 PM GMT)

நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதியின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, ரூ.4½ லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உபகரணங்களை வழங்கினார்.

பாளையங்கோட்டை பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.32,190 மதிப்பிலான விளையாட்டு சாதனங்கள், காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50,500 மதிப்பிலான விளையாட்டு சாதனங்கள், சிவசைலம் காதுகேளாதோர் பள்ளிக்கு ரூ.15 ஆயிரத்திலும், 4 மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதுதவிர மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கூடங்களுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் உள்பட மொத்தம் ரூ.4 லட்சத்து 45 ஆயிரத்து 731 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்தி குளோரி எமரால்டு, உதவி கலெக்டர் (பயிற்சி) வேல்மயில், முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story