ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்பு தொழுகை
காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.
ஆறுமுகநேரி,
காயல்பட்டினம் அல்ஜாமி உல் அஸ்ஹர் ஜீம்மா பள்ளி வாசல் மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் ஆகியவை சார்பில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை முன்னிட்டு நேற்று காலையில் காயல்பட்டினம் கடற்கரையில் ஏராளமான முஸ்லிம்கள் கூடினர். அங்கு ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகையை பள்ளிவாசல் இமாம் நைனாமுகம்மது நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிவாசல் தலைவர் டி.ஏ.எஸ்.முகமது அபுபக்கர், பொருளாளர் துளிர் உமர், துணை செயலாளர்கள் எல்.கே.கே.லெப்பைதம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு தொழுகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகையை தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

Related Tags :
Next Story