மாவட்டம் முழுவதும் 19 பேரூராட்சி வார்டுகளின் இடஒதுக்கீடு விவரம் வெளியீடு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளின் வார்டுகள் இடஒதுக்கீடு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 19 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் உள்ள வார்டுகள் யார், யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன என்ற விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஆலாம்பாளையம் பேரூராட்சியில் 11-வது வார்டு எஸ்.சி. பொதுப்பிரிவுக்கும், 2-வது வார்டு எஸ்.சி. பெண்ணுக்கும், 1, 3, 4, 7, 13, 14, 15 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மோகனூர் பேரூராட்சியில் 15-வது வார்டு எஸ்.சி. பொதுப்பிரிவுக்கும் 10-வது வார்டு எஸ்.சி. பெண்ணுக்கும், 1, 3, 7, 8, 9, 11, 13 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
நாமகிரிபேட்டை பேரூராட்சியில் 4, 12, 15 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பொது பிரிவுக்கும், 1, 3, 10 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும், 2, 7, 13, 14, 16, 18 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
படவீடு பேரூராட்சியில் 8 மற்றும் 11-வது வார்டுகள் எஸ்.சி. பொது பிரிவுக்கும், 6, 10, 12 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும், 2, 3, 4, 13, 15 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
பரமத்தி பேரூராட்சியில் 15-வது வார்டு எஸ்.சி. பொது பிரிவுக்கும், 1 மற்றும் 3-வது வார்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும், 2, 4, 6, 9, 10, 11 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
பாண்டமங்கலம் பேரூராட்சியில் 13-வது வார்டு எஸ்.சி. பொது பிரிவுக்கும், 12-வது வார்டு எஸ்.சி. பெண்ணுக்கும், 1, 2, 3, 4, 6, 7 மற்றும் 10 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
மல்லசமுத்திரம் பேரூராட்சியில் 6-வது வார்டு எஸ்.சி. பொது பிரிவுக்கும், 4-வது வார்டு எஸ்.சி. பெண்ணுக்கும், 2, 3, 7, 10, 11, 12 மற்றும் 14 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
பொத்தனூர் பேரூராட்சியில் 5-வது வார்டு எஸ்.சி. பெண்ணுக்கும், 1, 8, 9, 12, 13, 14, 15 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
சேந்தமங்கலம் பேரூராட்சியில் 11 மற்றும் 18-வது வார்டுகள் எஸ்.சி. பொது பிரிவுக்கும், 3, 15, 17 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும், 1, 4, 5, 7, 9 மற்றும் 13 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
பரமத்திவேலூர் பேரூராட்சியில் 12-வது வார்டு எஸ்.சி. பொது பிரிவுக்கும், 2-வது வார்டு எஸ்.சி. பெண்ணுக்கும், 7, 8, 9, 11, 15, 16, 17 மற்றும் 18 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
அத்தனூர் பேரூராட்சியில் 9 மற்றும் 12 வார்டுகள் எஸ்.சி. பொதுபிரிவுக்கும், 2 மற்றும் 14-வது வார்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும், 1, 3, 6, 7, 8 மற்றும் 11 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
எருமப்பட்டி பேரூராட்சியில் 14-வது வார்டு எஸ்.சி. பொது பிரிவுக்கும், 15-வது வார்டு எஸ்.சி. பெண்ணுக்கும், 3, 4, 5, 8, 9, 11, 12 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொதுபிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் 3 மற்றும் 14-வது வார்டுகள் எஸ்.சி. பொது பிரிவுக்கும், 1, 4, 12 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும், 5, 6, 8, 9 மற்றும் 10 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
பட்டணம் பேரூராட்சியில் 10, 13, 15 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பொது பிரிவுக்கும், 2, 4, 11, 12 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும், 1, 6, 7, 8 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் 7-வது வார்டு எஸ்.சி.பெண்ணுக்கும், 1, 6, 8, 10, 11, 12 மற்றும் 14 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
சீராப்பள்ளி பேரூராட்சியில் 2, 5, 11 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பொது பிரிவுக்கும், 7, 8, 14 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும், 3, 6, 10, 12, 15 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
வெண்ணந்தூர் பேரூராட்சியில் 14-வது வார்டு எஸ்.சி. பெண்ணுக்கும், 1, 3, 6, 7, 8, 11 மற்றும் 15 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
வெங்கரை பேரூராட்சியில் 8-வது வார்டு எஸ்.சி. பெண்ணுக்கும், 3, 5, 6, 7, 9, 12 மற்றும் 13 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
ஆர்.புதுப்பட்டி பேரூராட்சியில் 8 மற்றும் 12-வது வார்டுகள் எஸ்.சி. பொது பிரிவுக்கும், 4, 14, 15 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும், 3-வது வார்டு எஸ்.டி. பெண்ணுக்கும், 2, 5, 9 மற்றும் 11 ஆகிய வார்டுகள் பெண்கள் பொதுபிரிவுக்கும், மீதமுள்ள வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story