வானவில் : டி.வி.எஸ். அபாச்சே ஆர்.ஆர் 310 அறிமுகம்


வானவில் : டி.வி.எஸ். அபாச்சே ஆர்.ஆர் 310 அறிமுகம்
x
தினத்தந்தி 5 Jun 2019 3:16 PM IST (Updated: 5 Jun 2019 3:16 PM IST)
t-max-icont-min-icon

டி.வி.எஸ். நிறுவனம் தனது பிரபல மாடலான அபாச்சேயில் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

அபாச்சே ஆர்.ஆர் 310 என்ற பெயரில் வந்துள்ள இந்த மோட்டார் சைக்கிளின் விலை ரூ.2.27 லட்சமாகும். இதில் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி உள்ளது கூடுதல் சிறப்பாகும். முந்தைய மாடலைக் காட்டிலும் ரூ.3 ஆயிரம் கூடுதல் விலையில் பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த மோட்டார் சைக்கிள் திகழ்கிறது.

ஸ்லிப்பர் கிளட்ச் வசதி இதுபோன்ற சாகச மோட்டார் சைக்கிள் பிரிவில் இது நிரந்தர வசதியாக இடம்பெற்றுவிட்டது. இந்த வசதி இருப்பதால் வாகன ஓட்டிகள் மிக எளிதாக கியர் மாற்ற முடிகிறது. இப்புதிய மாடல் பான்டம் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

இதில் சிவப்பு வண்ண மோட்டார் சைக்கிள் வெள்ளை நிற ஸ்டிக்கருடன் பார்ப்பதற்கே அழகாக வந்துள்ளது. இது 312.2 சி.சி. திறன் கொண்டது. ஒற்றை சிலிண்டர், டி.ஓ.ஹெச்.சி. மோட்டார் உள்ளது. 34 ஹெச்.பி. திறன், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. புதிய மாடல் மிகச் சிறப்பாக இருப்பதோடு சிறந்தசெயல் திறன் கொண்டதாக இளைஞர்களை பெரிதும் ஈர்க்கும் என்று நிறுவனம் பெரிதும் நம்புகிறது.

Next Story