வானவில் : பியாஜியோவின் ‘அப்ரிலியா ஸ்டோர்ம்’


வானவில் : பியாஜியோவின் ‘அப்ரிலியா ஸ்டோர்ம்’
x
தினத்தந்தி 5 Jun 2019 9:56 AM GMT (Updated: 5 Jun 2019 9:56 AM GMT)

பியாஜியோ குழுமத்தின் பிரபல பிராண்டுகளில் அப்ரிலியா ஒன்றாகும். இந்தப் பெயரில் ஸ்கூட்டர்கள் மோட்டார் சைக்கிள்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது அப்ரிலியா ஸ்டோர்ம் 125 என்ற பெயரிலான ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.65 ஆயிரமாகும். 2018-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த வாகனம் தற்போது விற்பனைக்கு அறிமுகமாகிறது. இதில் டிரம் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் இதில் ஒருங்கிணைந்த பிரேக்கிங் வசதி (சி.பி.எஸ்.) புகுத்தப்பட்டுள்ளது. இதன் சக்கரங்கள் 12 அங்குல அளவிலானவை. வழக்கமான மாடலில் கூட வீ ரப்பர் ஆப் ரோட் வகையிலான டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் கிராபிக் ஸ்டிக்கர்கள் பளிச்சென தெரியும் வகையில் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. முகப்பு விளக்கு மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் கிளஸ்டர் முந்தைய மாடலில் உள்ளதைப் போன்றே இதிலும் உள்ளது. ஒற்றை சிலிண்டர், 3 வால்வு ஏர் கூல்டு என்ஜினைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது 9.5 ஹெச்.பி. திறனை 7,250 ஆர்.பி.எம். வேகத்திலும், 9.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை 6,250 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. இது டி.வி.எஸ். என்டார்க் 125, ஹோண்டா கிரேசியா ஆகிய மாடலுக்குப் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.

Next Story