வானவில் : டொயோட்டா ‘கிளன்ஸா’


வானவில் :  டொயோட்டா ‘கிளன்ஸா’
x
தினத்தந்தி 5 Jun 2019 5:42 PM IST (Updated: 5 Jun 2019 5:42 PM IST)
t-max-icont-min-icon

கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டொயோட்டா நிறுவனம் தனது புதிய மாடல் காரை கிளன்ஸா என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் மற்றொரு கார் தயாரிப்பு நிறுவனமான சுஸுகியுடன் கூட்டு சேர்ந்தது. இதன் அடிப்படையில் சுஸுகியின் பிரபல மாடலான பலேனோவைப் போன்ற வடிவமைப்பில் புதிய காரை டொயோட்டா உருவாக்கியுள்ளது. இதற்கு கிளென்ஸா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புதிய கார் பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர ரக ஹைபிரிட் மாடல் காராகும். இதில் 1.2 லிட்டர் கே.12சி டியூயல் என்ஜின் உள்ளது. இத்தகைய என்ஜின்தான் சமீபத்தில் பலேனோ மாடலிலும் பயன்படுத்தப்பட்டது.

இது 90 ஹெச்.பி. திறனையும் 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளன. இது தவிர 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், கே.12பி. மாடலும் தயாராகிறது. இது 83 ஹெச்.பி. திறனும் 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் கொண்டது. இதில் சி.வி.டி. கியர் பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு மானுவல் கியர் வசதியும் உள்ளது.

இந்தக் கார் சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டருக்கு 21.01 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஜி.எம்.டி. (ஸ்மார்ட் ஹைபிரிட்) மாடலானது ஒரு லிட்டருக்கு 23.87 கி.மீ. தூரம் ஓடியது. இதில் சி.வி.டி மாடல் 19.56 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி பலேனோ வழக்கமாக சாலைகளில் ஓடும் அளவிற்கு இணையாக உள்ளது.

இதில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி, 7 அங்குல தொடுதிரை கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன் வசதி, குரல் வழி கட்டுப்பாடு ஆகியன உள்ளன.

பாதுகாப்பு வசதியாக முன்புறம் 2 ஏர் பேக்குகள், இ.பி.டி. வசதி, ரியர் பார்க்கிங் சென்சார் வசதி, ரிவர்ஸ் கேமரா ஆகியன இதில் உள்ள சிறப்பம்சங்களாகும். வேகக் கட்டுப்பாடு மற்றும் சீட் பெல்ட் அறிவுறுத்தல் வசதி ஆகியனவும் இதில் உள்ளது.

இந்த காருக்கும் டொயோட்டா நிறுவனம் மூன்று ஆண்டு அல்லது ஒரு லட்சம் கி.மீ. தூரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று தெரிகிறது.

இந்தகார் ஹூண்டாய் ஐ 20, ஹோண்டா ஜாஸ், ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

Next Story