வானவில் : கையடக்க ஏர் பியூரிபயர்
சுத்தமான காற்று இப்போது நகர்ப்பகுதிகளில் மிகவும் அரிதாகிவிட்டது. பெருகிவரும் வாகனப் பெருக்கம் காரணமாக நகர்ப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுவாசக் கோளாறு சார்ந்த நோய்களுக்கு ஆளாகின்றனர்.
இதனால் ஏர் பியூரிபயர்கள் மிகவும் அவசியமாகிவருகிறது. வீடுகளில் குறிப்பாக படுக்கையறைகளில் இப்போது ஏ.சி.யுடன் ஏர் பியூரிபயரை உபயோகிப்பது அதிகரித்து வருகிறது. அந்த அளவுக்கு சுற்றுச் சூழல் மாசடைந்து வருகிறது.
இருப்பினும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான சுத்தமான காற்றை தரும் காற்று சுத்திகரிப்பானை (ஏர் பியூரிபயர்) ஹோம் லேப் நிறுவனம் உருவாக்கிஉள்ளது.
இது அறையில் உள்ள காற்றை 99 சதவீதம் சுத்தம் செய்து விடுகிறது. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மிகவும் அவசியமானது. தூசு, பூஞ்சை, புகை, வீட்டு செல்லப் பிராணிகளிடமிருந்து காற்றில் கலந்திருக்கும் பொடுகு போன்றவற்றையும் இது நீக்கிவிடும். இத்துடன் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளையும் இது அழித்துவிடும். இது காற்றில் கலந்து வரும் நெடியையும் நீக்கிவிடும். இது 360 டிகிரி சுழன்று காற்றில் கரைந்துள்ள அனைத்து மாசுவையும் நீக்கிவிடும். 50 அடி சுற்றுப் பகுதியில் இது சுத்தமான காற்றை அளிக்கும். வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் சிறிய அளவினதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள பில்ட்டரை மாற்ற வேண்டிய நேரத்தில் விளக்கு எரிந்து அதையும் அறிவுறுத்தும். இதன் விலை சுமார் ரூ.3,500.
Related Tags :
Next Story