சேலத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை


சேலத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை
x
தினத்தந்தி 6 Jun 2019 4:15 AM IST (Updated: 5 Jun 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

சேலம், 

சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுத்தூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி சரசு (வயது 40). இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரசு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் எம்.கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பார்வதி(75). இவர் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இவரை கவனிப்பதற்கு யாரும் வராததால் மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்வதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story