ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு
காயல்பட்டினம், கோவில்பட்டி, உடன்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.
ஆறுமுகநேரி,
காயல்பட்டினத்தில் நேற்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையை முன்னிட்டு காயல்பட்டினத்தில் உள்ள புதுப்பள்ளி, முகைதீன் பள்ளி, குருவித்துறை பள்ளி, இரட்டைகுளம் பள்ளி, கொடிமர சிறுநயினார் பள்ளி, பெரிய பள்ளிவாசல், மொகதூம் பள்ளி, ஹாஜி அப்பா தைக்கா பள்ளி, ஆறாம் பள்ளி, அப்பா பள்ளி, கடைப்பள்ளி, காட்டு மக்தூம் பள்ளி உள்பட 33 பள்ளிவாசல்களிலும், 90 பெண்கள் தைக்காக்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நேற்று காலை நடந்தது. தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதேபோல் காயல்பட்டினம் தவ்ஹித் பேரவை சார்பில் கே.எம்.டி. மருத்துவமனை எதிரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதனை ஹஸானா லெப்பை நடத்தினார். தொடர்ந்து குத்பா பேருரையை தொண்டி பரகத்அலி நடத்தினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காயல்பட்டினம் கிளை சார்பில் காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
கோவில்பட்டி செக்கடி தெருவில் உள்ள டவுன் ஜாமியா பள்ளிவாசலில் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. பள்ளிவாசல் இமாம் முகம்மது அலி தொழுகையை நடத்தினார். பள்ளிவாசல் தலைவர் சிந்தா மதார், செயலாளர் ஹூமாயுல்லா, பொருளாளர் பீர் முகம்மது மற்றும் பலர் கலந்துகொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு அரிசி, பண முடிப்பு வழங்கினர். இதே போல் உடன்குடி எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள நபிவழித்திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் வட்டார தலைவர் தெளலத்துல்லா தலைமையில் செயலாளர் குத்புதீன், பொருளாளர் உமர், துணை தலைவர் யூசுப் முன்னிலையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் மாநில பேச்சாளர் அபுபக்கர் சித்திக் கலந்துகொண்டு பேசினார். மருத்துவ அணியை சேர்ந்த இப்ராகிம் நன்றி கூறினார். ஆழ்வார்திருநகரி மத்ர ஜஸ்த் துர்ரகுமான் பள்ளிவாசல் திடல் ஆகிய இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.

Related Tags :
Next Story