கோவில்பட்டியில் அரசு பொருட்காட்சி நிறைவு ரூ.1.96 கோடிக்கு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
கோவில்பட்டியில் நடந்த அரசு பொருட்காட்சி நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 96 லட்சத்துக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி வளாகத்தில் ஏப்ரல் 20-ந்தேதி அரசுபொருட்காட்சி தொடங்கியது. நேற்று பொருட்காட்சியின் நிறைவு விழா நடந்தது. இதில் வேளாண்மை துறை, மகளிர் திட்டம், வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவு, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன், பொது சுகாதார துறை, மாவட்ட வருவாய் துறை, மாவட்ட திட்ட அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை, தொழிலாளர் நலம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் 892 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 96 லட்சத்து 36 ஆயிரத்து 925-க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்.
இந்த பொருட்காட்சியில் அரசு துறை சார்பில் 27 அரங்குகள் உள்பட பல அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அரசு துறை அரங்குகளில் முதல் பரிசை சமூக நலத்துறையும், 2-வது பரிசை வனத்துறையும், 3-வது பரிசை நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறையும் பெற்றது. அதே போல் அரசு சார்பு துறை சார்பில் முதல் பரிசை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், 2-வது பரிசை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமும், 3-வது பரிசை பேரூராட்சி துறைக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சங்கர், பொருட்காட்சி இணை இயக்குனர் முத்துசாமி, சின்னப்பன் எம்.எல்.ஏ., கோவில்பட்டி உதவி கலெக்டர் அமுதா, வட்டார போக்குவரத்து அதிகாரி சந்திரசேகர், தாசில்தார் பரமசிவன், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் கிரி, முருகானந்தம், நகர செயலாளர் விஜயபாண்டியன், நிலவள வங்கி தலைவர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story