உளுந்தூர்பேட்டை அருகே நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


உளுந்தூர்பேட்டை அருகே நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2019 3:45 AM IST (Updated: 6 Jun 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே காலி பீர்பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டை, 

திருச்சியில் இருந்து காலி பீர்பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. உளுந்தூர்பேட்டை அருகே புல்லூரில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய லாரி நடுரோட்டில்கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியில் ஏற்றி வரப்பட்ட ஏராளமான காலி மதுபாட்டில்கள் உடைந்து சாலையில் சிதறியது. லாரி சாலையின் குறுக்கே கவிழ்ந்து கிடந்ததாலும், பீர்பாட்டில்கள் உடைந்து சாலையில் சிதறிக் கிடந்ததாலும் அவ்வழியாக வாகனங்கள் செல்ல வழியின்றி நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதுபற்றி தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான லாரி மற்றும் உடைந்த பீர்பாட்டில்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். இந்த விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் லாரி டிரைவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Next Story