டெல்டா விவசாயிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் ஸ்ரீமுஷ்ணம் வட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம்


டெல்டா விவசாயிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் ஸ்ரீமுஷ்ணம் வட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 6 Jun 2019 3:45 AM IST (Updated: 6 Jun 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

டெல்டா விவசாயிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் என்று ஸ்ரீமுஷ்ணம் வட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஸ்ரீமுஷ்ணம், 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஸ்ரீமுஷ்ணம் வட்ட பேரவை கூட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். பாலசுப்பிரமணியன், தெய்வசிகாமணி, சுந்தரமூர்த்தி, ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்டுமன்னார்கோவில் வட்ட செயலாளர் விஜய குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் புதிய தலைவராக பாண்டியன், செயலாளராக விஜயகுமார், துணை தலைவர்களாக பேரூர் ஆதிமூலம், சாத்தமங்கலம் ராமச்சந்திரன், துணை செயலாளர்களாக சேல்விழி பாலசுப்பிரமணியன், முத்தமிழ்ச்செல்வன், பொருளாளராக பாண்டுரங்கன் ஆகியோருடன் 16 வட்டக்குழு நிர்வாகிகளும் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு வழங்கும் சிறப்பு சலுகைகள், இடுபொருட்கள், இலவச மின்சாரம் அனைத்தும் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தால், இப்பகுதி வறண்டு விட்டது. ஆகவே என்.எல்.சி. சமுதாய பொறுப்புணர்வு நிதியில் இருந்து, கிராமத்திற்கு 5 ஆழ்துளை கிணறு அமைத்து, மின் இணைப்பு வழங்க வேண்டும்.

நெய்வேலி 2 மற்றும் 3 -ம் சுரங்க நீரை வெள்ளாற்றில் விட வேண்டும். எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.23 கோடி கரும்பு பண பாக்கிகள் அனைத்தையும் உடனே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் மாதவன், மாவட்ட துணை செயலாளர் கற்பனைச்செல்வம், மாவட்ட துணை செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தில்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைவர் பாண்டியன் நன்றி கூறினார்.

Next Story