வடகாடு போலீஸ் நிலையம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி
வடகாடு போலீஸ் நிலையம் முன்பு போலீசாரை கண்டித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம், அணவயல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45). இவர் அப்பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து நேற்று காலை அணவயல் கிராமத்திற்கு சென்று மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த சேகரை போலீசார் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் நடந்த சற்று நேரத்தில், ஆலங்குடி மதுவிலக்கு பிரிவில் இருந்து வந்ததாக கூறி, சேகர் வீட்டிற்கு சென்ற ஒருவர், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் உள்ள பொருட்களை தள்ளிவிட்டதுடன், வீட்டில் இருந்த சேகரின் குழந்தைகளிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த குழந்தைகள் இதுகுறித்து தங்களது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளனர்.
இதற்கிடையே சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த சேகரிடம் குழந்தைகள் கதறி அழுது கொண்டே போலீசார் வந்து மிரட்டிவிட்டு போனதாக கூறியுள்ளனர். இதையடுத்து சேகர் மற்றும் அவரது மனைவி வனிதா, சேகரின் தாயார் ஆகியோர் வடகாடு போலீஸ் நிலையம் முன்பு, வீட்டில் குழந்தைகளிடம் தகாத வார்த்தையில் பேசிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியபடியே மண்எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். ஆனால் அங்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சேகரின் மனைவி வனிதா கூறுகையில், என் கணவரை அனுமதி இல்லாமல் மது விற்பதாக கூறி, போலீசார் பிடித்து சென்றனர். ஆனால் அதன் பிறகு தனியாக வந்த போலீசார் எங்கள் வீட்டில் உள்ள பொருட்களை உடைத்துவிட்டு குழந்தைகளிடம் மதுபாட்டில்களை விற்கும் பணத்தில் படிப்பதற்கு செத்து போகலாம் என்று கடுமையாக பேசியதால் குழந்தைகள் கதறி அழுதனர். கூலி வேலை செய்து சேர்த்து வைத்திருந்த பணம் ரூ.22 ஆயிரத்து 500-ஐயும் காணவில்லை. இதனால் தான் வடகாடு போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்கும் முடிவிற்கு வந்தோம். ஆனால் போலீசார் எங்களை தடுத்து விட்டனர். இனிமேல் என் கணவர் மது விற்கமாட்டார். அதே போல அணவயல், மாங்காடு பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும், என்றார்.

Related Tags :
Next Story