மாவட்ட செய்திகள்

அம்மன் கோவில் விழாக்களில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் + "||" + On the occasion of Amman temple festivals, a large crowd of devotees pulled out

அம்மன் கோவில் விழாக்களில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

அம்மன் கோவில் விழாக்களில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
விராச்சிலை, ராங்கியத்தில் உள்ள அம்மன் கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் படித்து இழுத்தனர்.
திருமயம்,

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே விராச்சிலையில் மது அடைக்கல காத்த அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை, மாலை இருவேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.


தேரோட்டம்

இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அடைக்கல காத்த அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினார். இதைதொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரை முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

ராங்கியம்

திருமயம் அருகே உள்ள ராங்கியத்தில் பொன்னழகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் பொன்னழகி அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். தேரை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் படித்து இழுத்தனர். தேரை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. நவராத்திரி விழா; காஷ்மீரின் வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு 3.64 லட்சம் பக்தர்கள் வருகை
நவராத்திரி விழாவை முன்னிட்டு காஷ்மீரின் வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு 3.64 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
2. கோவில் அருகே இரவில் ஓய்வெடுத்த 3 பக்தர்கள் பாம்பு கடித்ததில் உயிரிழப்பு
ராஜஸ்தானில் கோவில் அருகே இரவில் ஓய்வெடுத்த 3 பக்தர்கள் பாம்பு கடித்ததில் உயிரிழந்தனர்.
3. ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
ஆடிப்பெருக்கை யொட்டி பெரம்பலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4. அத்திவரதர் உற்சவம்; பக்தர்கள் வசதிக்கு கூடுதலாக கூடாரம் அமைக்க ஏற்பாடு: தலைமை செயலாளர் பேட்டி
காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதலாக கூடாரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைமை செயலாளர் சண்முகம் பேட்டியளித்து உள்ளார்.
5. அமர்நாத் புனித யாத்திரை; 25க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மூச்சு திணறல்
அமர்நாத் புனித யாத்திரைக்கு சென்ற பக்தர்களில் 25க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...