ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
மாவட்டம் முழுவதும், ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
திண்டுக்கல்,
முஸ்லிம்களின் பண்டிகையான ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் புத்தாடை உடுத்தி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையும் நடத்தினர். அந்த வகையில் திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தொழுகை நடத்தினர். அதனைத்தொடர்ந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
இதையடுத்து வீடுகளுக்கு திரும்பிய முஸ்லிம்கள் பிரியாணி சமைத்து உறவினர்களுக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் கொடுத்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். இதேபோல் திண்டுக்கல் பஸ் நிலையம், ரவுண்டுரோடு, முகமதியார்புரம், நாகல்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.
அதேபோல் சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டி, கணவாய்பட்டி, மருநூத்து, சாணார்பட்டி, ராஜாக்காபட்டி, மந்தநாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் புத்தாடைகளை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். நத்தம் தாலுகா செந்துறை பகுதிகளில் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி செந்துறையில் உள்ள பள்ளிவாசலில் நேற்று அதிகாலை முதலே சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேபோன்று பெரியூர்பட்டி, சொறிப்பாறைபட்டி, மணக்காட்டூர், குட்டுப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள ஈத்கா மைதானங்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
வேடசந்தூரில் உள்ள பெரியபள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் பெரிய பள்ளிவாசல் தலைவர் முகமதுகாசீம், செயலாளர் உமர்அலி, சின்னபள்ளிவாசல் தலைவர் பசீர்அகமது மற்றும் நிர்வாகிகள், முஸ்லிம்கள் பலர் பங்கேற்றனர். பின்னர் பள்ளி வாசலில் இருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதி, வடமதுரை ரோடு, பஸ் நிலையம், ஆத்துமேடு வழியாக ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்துக்கு வந்து கூட்டுத்தொழுகையில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல் பகுதியில் நேற்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகர் முழுவதும் வசிக்கும் முஸ்லிம்கள் கலையரங்கம் அருகில் திரண்டனர். பின்னர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பியர்சோழா அருவி சாலையில் உள்ள ஈத்கா மைதானம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அங்கு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிறப்பு தொழுகை நடத்தினர். இந்த சிறப்பு தொழுகையில் நகர் பள்ளிவாசல் நிர்வாகி பேஸ்இமாம் காசிம், தி.மு.க. நகர செயலாளர் முகமது இபுராகிம், ம.தி.மு.க. செயலாளர் தாவூத், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் அப்துல் கனிராஜா உள்பட முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பழனி பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. அத்துடன் சண்முகநதி அருகே உள்ள பள்ளிவாசல் திடலில் ஆயிரக்கணக் கான முஸ்லிம்கள் திரண்டு கூட்டுத்தொழுகை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் இருந்த ஏழைகளுக்கு தானமாக பொருட்கள், பணம் ஆகியவற்றை அவர்கள் வழங்கினர். இதேபோல் நத்தம் கோரிமேடு ஈத்கா மைதானத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோல் வத்தலக்குண்டு, பட்டி வீரன்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story