ரெயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 96 பேர் மீட்பு


ரெயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 96 பேர் மீட்பு
x
தினத்தந்தி 6 Jun 2019 2:05 AM IST (Updated: 6 Jun 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ரெயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 96 பேர் மீட்கப்பட்டனர்.

சென்னை,

சென்னையில் ரெயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிச்சைக்காரர்களை மீட்டு அவர்களுக்கு உணவு-உடை வழங்கி, வேண்டிய உதவிகள் செய்து தொண்டு நிறுவனங்கள் வழியாக ‘கவுன்சிலிங்’ வழங்கப்பட்டு, குடும்பத்தினருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ரெயில்வே டி.ஐ.ஜி. வி.பாலகிருஷ்ணன் தலைமையில் ரெயில்வே எஸ்.பி. ரோகித்நாதன் ராஜகோபால் மேற்பார்வையில் தீவிரமாக நடந்து வருகிறது.

அந்தவகையில் சென்னையில் நேற்று 57 ஆண் பிச்சைக்காரர்கள், 5 பெண் பிச்சைக்காரர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட 8 பேர் உள்பட 96 பேர் மீட்கப்பட்டு தொண்டு நிறுவனங்கள் மூலமாக அவர்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மேற்கண்ட தகவல் ரெயில்வே எஸ்.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story