பேட்டையில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


பேட்டையில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 6 Jun 2019 4:30 AM IST (Updated: 6 Jun 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

பேட்டையில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேட்டை,

நெல்லையை அடுத்த பேட்டை ஐ.டி.ஐ. அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில், செல்போன் கோபுரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில் பேட்டை அண்ணா நகரில் மற்றொரு இடத்தில் தனியார் நிறுவனம் சார்பில், செல்போன் கோபுரம் அமைப்பதற்காக, நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், பேட்டை அண்ணாநகர் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க, கோர்ட்டில் இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டு உள்ளது. அதேபோன்று இங்கும் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம். எனவே இங்கு செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து பொக்லைன் எந்திரம் திருப்பி அனுப்பப்பட்டது. தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Next Story