கர்நாடகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்ற வேண்டும் பா.ஜனதா எம்.பி.க்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள்
கர்நாடகத்தை முன் மாதிரி மாநிலமாக மாற்ற பணியாற்ற வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி.க்களுக்கு எடியூ ரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 25 எம்.பி.க்களுக்கு பாராட்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த விழா வுக்கு கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தலைமை தாங்கினார். மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் கலந்து கொண்டு பேசிய தாவது:-
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள், காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) மற்றும் ஊடகங் களின் கருத்துக்கணிப்புகளை தலைகீழாக மாற்றிவிட்டன. கர்நாடக வரலாற்றில் காங் கிரஸ் கூட்டணி மற்றும் பா.ஜனதா இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. பா.ஜனதா 51.4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. 22 தொகுதி களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பா.ஜனதா பெற்றுள்ளது.
பா.ஜனதா மெஜாரிட்டி
தலித் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதியிலும் பா.ஜனதா வென்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தும், 155 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜனதா மெஜாரிட்டி வாக்குகளை பெற்றுள்ளது. இது ஒரு புதிய சாதனை ஆகும். இந்த தேர்தல் முடி வுகள், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிரானவை அல்ல என்று கூறுவதை ஏற்க முடி யாது.
சட்டமன்றத்திற்கு இப் போது தேர்தல் நடந்தாலும், காங்கிரஸ் கூட்டணி கட்சி களை மக்கள் முழுமையாக புறக்கணிப்பார்கள். தென் இந்தியா வில் பா.ஜனதாவின் வெற்றி தொடங்கியுள்ளது.
இவ்வாறு முரளிதரராவ் பேசினார்.
முன்மாதிரி மாநிலம்
கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா பேசுகையில், “கர்நாடகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்ற நமது கட்சியின் 25 எம்.பி.க்களும் பணியாற்ற வேண்டும். கூட் டணி அரசு மக்களின் பிரச் சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால் நமது எம்.பி.க்கள் மக்களின் குறை களை கேட்டு அவற்றுக்கு தீர்வு காண வேண்டும். ஓராண்டு காலம் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த குமார சாமி இப்போது கிராமத்தில் தங்க திட்டமிட்டுள்ளார். குமாரசாமி நாடகமாடுகிறார்“ என்றார்.
இதில் மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, சுரேஷ் அங்கடி, முன்னாள் முதல்- மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.அசோக், கோவிந்த் கார்ஜோள், அரவிந்த் லிம்பாவளி, ஈசு வரப்பா, ஸ்ரீராமுலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story