18 மீனவர்களை விடுவிக்க இந்திய தூதரகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது; மீன்வளத்துறை இயக்குனர் தகவல்
இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற காரைக்கால் மீனவர்கள் 18 பேரை விடுவிக்க இந்திய தூதரகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முனுசாமி தெரிவித்தார்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்ட அரசலாறு முகத்துவாரத்தை தூர்வாருதல், உள்பட பல்வேறு வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி 11 மீனவ கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அதன்பேரில் மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவின் பேரில், மீன்வளத்துறை இயக்குனர் முனுசாமி, இணை இயக்குனர் தெய்வசிகாமணி, துணை இயக்குனர் கவியரசன் ஆகியோர் காரைக்கால் மீன்பிடி துறைமுகம், அரசலாறு முகத்துவாரம் மற்றும் மீனவ கிராமங்களை ஆய்வு செய்தனர்.
பின்னர் ஆய்வு குறித்து மீன்வளத்துறை இயக்குனர் முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
காரைக்கால் மாவட்ட மீனவர்களின் கோரிக்கை ஏற்று மீன்பிடி துறைமுகம், அரசலாறு முகத்துவாரத்தையும், மீனவ கிராமங்களையும் ஆய்வு செய்தோம். மீன்பிடி துறைமுகத்தை ஒட்டிச்செல்லும் அரசலாறு முகத்துவாரத்தில் ஆழம் குறைவாக உள்ளது. இதனால் முகத்துவாரம் வழியாக படகுகளை சிரமத்துடன் மீனவர்கள் கொண்டு செல்கிறார்கள். இதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தின் உதவியுடன் அரசலாறு முகத்துவாரத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவர்களின் கோரிக்கைகளை அமைச்சர்களிடம் பேசி உரிய தீர்வு காணப்படும்.
கடந்த ஏப்ரல் மாதம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இந்திய தூதரகத்தின் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை இலங்கை நீதிமன்றத்தில் வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடித்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தூதரகத்தை புதுச்சேரி அரசு வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story