விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கேட்டு பல்லாவரம் நகராட்சி அலுவலகம் முற்றுகை
பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தாம்பரம்,
அனகாபுத்தூர், அருணாச்சலம் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 45), இவரது மனைவி கலைவாணி (32), இவரது உறவினர் கதிரேசன் (19). இவர்கள் 3 பேரும் பல்லாவரம் நகராட்சியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 4-ந் தேதி காலை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் சாலையோரம் குப்பை அள்ளும் போது டிப்பர் லாரி ஒன்று 3 பேர் மீதும் மோதியது.
இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கலைவாணி மற்றும் கதிரேசன் ஆகியோர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பதை வழியுறுத்தி நேற்று குரோம்பேட்டையில் உள்ள பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் துணை தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டனர்.
Related Tags :
Next Story