பள்ளிக்கூடங்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்த மாணவ-மாணவிகள்


பள்ளிக்கூடங்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்த மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 7 Jun 2019 4:15 AM IST (Updated: 6 Jun 2019 8:27 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிக்கூடங்களிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வருவதால் கால விரயம் மற்றும் போக்குவரத்து செலவு ஏற்படுகிறது.

இதனை தவிர்ப்பதற்காக பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் அந்தந்த பள்ளிக்கூடங்களிலேயே வருகிற 17-ந்தேதி வரையிலும், இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்காக, பள்ளிக்கூடத்துக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, செல்போன் எண், இ-மெயில் முகவரி, சாதி சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.


அதன்படி, தூத்துக்குடி மாவட்ட பள்ளிக்கூடங்களில் ஏராளமான மாணவ-மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழை பெற்று, வேலைவாய்ப்பு அலுவலக பதிவையும் மேற்கொண்டனர்.

வருகிற 17-ந்தேதி வரையிலும் பள்ளிக்கூடங்களில் பதிவு செய்யும் அனைவருக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்க தொடங்கிய முதல் நாளே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படுகிறது.

Next Story