விருத்தாசலத்தில் மதுபோதையில் தொட்டிலில் விளையாடியவர் கழுத்து இறுகி சாவு


விருத்தாசலத்தில் மதுபோதையில் தொட்டிலில் விளையாடியவர் கழுத்து இறுகி சாவு
x
தினத்தந்தி 7 Jun 2019 4:00 AM IST (Updated: 6 Jun 2019 10:26 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் மது போதையில் தொட்டிலில் விளையாடியவர் கழுத்து இறுகி பரிதாபமாக இறந்தார்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் பெரியார் நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய தந்தையின் 2-வது மனைவியின் மகன் ராஜசேகர் (வயது 40). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று ராஜசேகர் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு அருகே உள்ள மரத்தில் சேலையால் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் மது போதையில் தலையை வைத்து அவர் விளையாடி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலை சுற்றியதில் ராஜசேகரின் கழுத்து இறுகியது. இதில் மயக்கம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜசேகர் பரிதாபமாக இறந்தார். அப்போது அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இது குறித்து பாண்டியன் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வ்சாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story