மங்கலம்பேட்டை அருகே பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு


மங்கலம்பேட்டை அருகே பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2019 3:30 AM IST (Updated: 6 Jun 2019 10:38 PM IST)
t-max-icont-min-icon

மங்கலம்பேட்டை அருகே பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருத்தாசலம், 

மங்கலம்பேட்டை அருகே தொட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி பார்வதி (வயது 38). சம்பவத்தன்று தொட்டிக்குப்பம் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது வீட்டு முன்பு இருந்த குடிநீர் மின்மோட்டார் மழையில் நனையாமல் இருப்பதற்காக அதனை மூடிவைப்பதற்காக பார்வதி சென்றார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர் பார்வதியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்தனர். இதில் திடுக்கிட்ட அவர் திருடன், திருடன் என கூச்சலிட்டதோடு, அவர்களை பிடிக்க முயற்சி செய்தார். பார்வதியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர்.

ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகினர். பறிபோன நகையின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து பார்வதி மங்கலம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story