சிவகாசியில் பரிதாபம் மழைநீரில் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலி


சிவகாசியில் பரிதாபம் மழைநீரில் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலி
x
தினத்தந்தி 7 Jun 2019 3:45 AM IST (Updated: 7 Jun 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

மழை நீரில் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகாசி, 

சிவகாசியில் நடந்துள்ள இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 48). இவர் நேற்று முன்தினம் மாலையில் காரனேசன் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. மழைநீரில் அருகிலிருந்த மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததாக தெரிகிறது.

மழைநீரில் நடந்த வந்த பரமேஸ்வரியை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். டாக்டர் அவரை பரிசோதனை செய்து, பரமேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story