மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் கட்சியினருக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் வேண்டுகோள்


மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் கட்சியினருக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 7 Jun 2019 3:15 AM IST (Updated: 7 Jun 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்ய கட்சியினருக்கு மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காரைக்கால், 

சுற்றுச்சூழலை காக்கும் வகையில் புதுச்சேரி, காரைக்காலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான பயிற்சி பட்டறை காரைக்காலில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் ராஜா.அரங்கசாமி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர்கள் பாலாஜி, அரவிந்தராஜ், கோகுல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவேகானந்தர் வரவேற்று பேசினார்.

மக்கள் நீதி மய்ய மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:-

மக்களுக்கு சேவையாற்றத்தான் கட்சி என்ற ஒரே நோக்கத்தில் கமல்ஹாசன் செயல்பட்டு வருகின்றார். அந்த வழியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் 3-ம் இடத்தை பிடித்தோம். ஆனால் உண்மையில் நாம்தான் முதல் இடத்தை பிடித்துள்ளோம்.

ஏனென்றால் தேர்தல் எனும் ஓட்டப்பந்தயத்தில் ஊக்க மருந்து ஏதும் சாப்பிடாமல் (ஓட்டுக்கு பணம் கொடுக்காமல்) ஓடி இந்த இடத்திற்கு வந்துள்ளோம். ஆனால் நமக்கு முன் முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள் ஊக்க மருந்து சாப்பிட்டு ஓடித்தான் அந்த இடங்களை பிடித்துள்ளனர். எனவே ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மக்களுக்கு வேண்டிய சேவைகளை செய்யவேண்டும் சுற்றுச்சூழல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பயிற்சி பட்டறையில் கட்சியின் பொதுச்செயலாளர் ராஜன், இணை பொதுச்செயலாளர் முருகேசன், பொருளாளர் தாமோ.தமிழரசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story