‘ஒற்றை யானை அபாயகரமானது’ பட தொடக்க விழாவில் சித்தராமையா பேச்சு


‘ஒற்றை யானை அபாயகரமானது’ பட தொடக்க விழாவில் சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 7 Jun 2019 4:15 AM IST (Updated: 7 Jun 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

ஒற்றை யானை அபாயகரமானது என்று பட தொடக்கவிழாவில் சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

நடிகர் துனியா விஜய், ‘சலக‘ (ஒற்றை யானை) என்ற திரைபடத்தை நடித்து இயக்குகிறார். இந்த படத்தின் தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

ஒவ்வொரு படத்தின் வெற்றியும் அதன் இயக்குனரை பொறுத்து அமைகிறது. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி திரைப்படங்களை எடுக்க வேண்டும். நடிப்பில் துனியா விஜய் வெற்றி பெற்றுவிட்டார். இப்போது அவர் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இதிலும் அவருக்கு வெற்றி கிடைக்கட்டும். சமீபகாலமாக திரைப்படங்களில் ‘மசாலா‘ அதிகரித்துவிட்டது.

மந்திரிசபை விரிவாக்கம்

நல்ல கருத்துகளை சொல்லும் படங்களை எடுக்க வேண்டும். நல்ல கருத்துடன் மனங்களை மகிழ்விக்கும் காட்சிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த ‘சலக‘ படத்தின் கதை என்ன என்பது எனக்கு தெரியாது. அதை ரகசியமாக வைத்துள்ளனர். யானைகள் கூட்டமாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் ஒற்றை யானை எப்போதும் அபாயகரமானது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

அதன் பிறகு நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “மந்திரிசபை விரிவாக்கம் பற்றி எனக்கு தெரியாது. முதல்-மந்திரியிடம் கேளுங்கள்“ என்றார்.

Next Story