தாயுடன் தூங்கிய 1 வயது சிறுவன் கடத்தல் மர்ம நபருக்கு வலைவீச்சு


தாயுடன் தூங்கிய 1 வயது சிறுவன் கடத்தல் மர்ம நபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Jun 2019 2:43 AM IST (Updated: 7 Jun 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

தாயுடன் தூங்கி கொண்டு இருந்த 1 வயது சிறுவனை கடத்தி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தானே,

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சந்துல். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வேலை தேடி மும்பைக்கு குடும்பத்துடன் வந்தார். இதில் வாடகைக்கு வீடு பார்க்க போதிய பணம் இல்லாததால் சந்துல் குடும்பத்துடன் பிவண்டி, தமன்கர் நாக்கா பாலத்துக்கு கீழ் தங்கி இருந்தார்.

சம்பவத்தன்று காலை சந்துல், அவரது மனைவி மற்றும் 1 வயது மகன் ஆசிக் அந்த பாலத்தின் கீழ் தூங்கி கொண்டு இருந்தனர்.

இந்தநிலையில், மனைவி எழுந்து பார்த்த போது அருகில் தூங்கி கொண்டு இருந்த 1 வயது மகன் ஆசிக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அருகில் உள்ள பகுதியில் சிறுவனை தேடிப்பார்த்தனர்.

போலீஸ் வலைவீச்சு

ஆனால் எங்கும் தேடியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சந்துல் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் சிறுவன் ஆசிக்கை கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதையடுத்து போலீசார் சிறுவனை கடத்தி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Next Story