‘பேஸ்புக்’கில் பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர் கைது மானபங்க வழக்கில் தேடப்பட்டு வந்தவர்


‘பேஸ்புக்’கில் பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர் கைது மானபங்க வழக்கில் தேடப்பட்டு வந்தவர்
x
தினத்தந்தி 7 Jun 2019 2:51 AM IST (Updated: 7 Jun 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

பேஸ்புக்கில் பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே அவர் மானபங்க வழக்கில் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.

மும்பை

பால்கர் மாவட்டம் வசாயை சேர்ந்தவர் ரோஜர் டயஸ் (வயது35). இவர் வசாய் பகுதி பா.ஜனதா இளைஞர் அணி தலைவராக இருந்தார். இவர் மீது கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெண் ஒருவர் மானபங்க புகார் அளித்து இருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரோஜர் டயசை தேடி வந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து அவர் பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டார்.

பெண்ணுக்கு தொல்லை

இந்தநிலையில் சமீபத்தில் ரோஜர் டயஸ் வசாயை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு பேஸ்புக்கில் தொல்லை கொடுத்து வந்து இருக்கிறார். இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரோஜர் டயஸ் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க போலீசார் அந்த பெண்ணை அவருடன் பேச வைத்தனர். இதன்மூலம் ரோஜர் டயஸ் அந்தேரியில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார் அந்தேரியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர்.

Next Story