மாவட்ட செய்திகள்

மதுராந்தகம் அருகே சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் தொட்டியில் ஆண் பிணம் + "||" + Drinking water to Chennai Honey in the pot Male corps

மதுராந்தகம் அருகே சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் தொட்டியில் ஆண் பிணம்

மதுராந்தகம் அருகே சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் தொட்டியில் ஆண் பிணம்
மதுராந்தகம் அருகே சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் தொட்டியில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுராந்தகம்,

வீராணம் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் மூலம் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது. இதற்காக ஆங்காங்கே குழாயில் 20 அடி ஆழ நீர்தேக்கத்தொட்டி பராமரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. மதுராந்தகத்தை அடுத்த வீராணங்குன்னம் என்ற இடத்தில் குழாயில் மேல் உள்ள நீர்த்தேக்கத்தொட்டியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் வந்தது.


அதன் பேரில் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது யாராவது அவரை கொலை செய்தார்களா ? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் தொட்டியில் வாலிபர் பிணமாக மிதந்தது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு முறுக்கு தயாரிக்கும் கருவியில் மறைத்து ரூ.21 லட்சம் தங்க பிஸ்கட் கடத்தல் வாலிபர் கைது
சவுதிஅரேபியாவில் இருந்து சென்னைக்கு முறுக்கு தயாரிக்கும் கருவியில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.21 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக ஆந்திர மாநில வாலிபரை கைது செய்தனர்.
2. மதுராந்தகம் அருகே பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்
மதுராந்தகம் அருகே பஸ் கவிழ்ந்து 30 பேர் படு காயம் அடைந்தனர்.
3. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர்: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்ற குழாய்கள் வந்தன
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்ற குழாய்கள் வந்தன.
4. மதுராந்தகம் அருகே துணிகரம் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
மதுராந்தகம் அருகே டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.