ஈரோட்டில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவ மையம் கேரள மாநில கலெக்டர்கள் திறந்து வைத்தனர்
ஈரோட்டில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவ மையத்தை கேரள மாநில கலெக்டர்கள் திறந்து வைத்தனர்.
ஈரோடு,
ஈரோடு பூசாரி சென்னிமலை வீதியில் ஆன்கோ பவுண்டேசன் சார்பில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் சுகுமார் தலைமை தாங்கினார். புற்றுநோய் கீமோதெரபி டாக்டர் என்.கார்த்திக், புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் வலி நிவாரண டாக்டர் ஜெ.சுகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். முன்னதாக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.அருணந்திசெல்வன் வரவேற்று பேசினார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட கலெக்டர் எஸ்.கார்த்திகேயன், திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் கே.வாசுகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய மருத்துவ மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மேலும் அவர்கள் குத்துவிளக்கும் ஏற்றி வைத்து பவுண்டேசன் லோகோவையும் வெளியிட்டனர்.
அதைத்தொடர்ந்து கொல்லம் மாவட்ட கலெக்டர் எஸ்.கார்த்திகேயன் பேசும்போது கூறியதாவது:-
புற்றுநோய் வந்தால் யாரிடம் சென்று சிகிச்சை பெறுவது? என்ன சிகிச்சை பெறுவது என்ற குழப்பம் நோயாளிகளிடம் உள்ளது. மேலும் அதிகமாக செலவாகும் என்பதால் ெபாதுமக்கள் சிகிச்சைக்கு மாற்று வழியை யோசிக்கிறார்கள். புற்றுநோய் தாக்கினால் அறுவை சிகிச்சை, ஹீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம். இதற்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஜனாதிபதி மூலமும் நிதியை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நுரையீரல் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் சரண்யா செல்வகுமார், மகப்பேறு டாக்டர்கள் பூங்கோதை, தீபிகா, என்ஜினீயர் செல்வகுமார், அரசு டாக்டர் அனிதா, கார்த்திக் மருத்துவமனை டாக்டர் மேனகா நற்றமிழரசு, பழனிவேல், அர்விந்த், ஜெகதீசன், குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Related Tags :
Next Story