நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்த மாணவியின் உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி
பிளஸ்-2 முடித்து விட்டு நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார்.
திருப்பூர்,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி ராஜலட்சுமி. மகள் ரிதுஸ்ரீ(வயது 18). இவர்கள் திருப்பூர் வெள்ளியங்காடு முத்தையன் கோவில் வீதியில் குடியிருந்து வருகிறார்கள். இவர் பிளஸ்-2 முடித்து விட்டு நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வெளியான நீட் தேர்வு முடிவில் ரிதுஸ்ரீ தோல்வியடைந்தார். இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே மகளை இழந்த ரிதுஸ்ரீயின் பெற்றோர் கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது. நேற்று காலை மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற சுப்பராயன், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.செல்வராஜ், மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்டவர்கள் சென்று ரிதுஸ்ரீயின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் இறுதிசடங்கிலும் பங்கேற்று மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள்.

Related Tags :
Next Story