வள்ளியூரில் கார் டிரைவர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
வள்ளியூரில் கார் டிரைவர் வீட்டில் 9 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வள்ளியூர்,
நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 54). இவர் வள்ளியூரில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் வள்ளியூர்- ராதாபுரம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று வெங்கடேஷ் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதில் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு அலமாரியில் இருந்த 9 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து அவர் வள்ளியூர் போலீசில் புகார் அளித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் யாரோ மர்ம நபர்கள் ஆள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story